கண்ணதாசன் பிறந்த நாள்: தமிழக அரசு சார்பில் காரைக்குடியில் சிலைக்கு மாலையணிவித்து ஆட்சியர் மரியாதை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசனின் 94 -வது பிறந்த நாள் விழா அவரது நினைவு மண்டபத்தில் புதன்கிழமை காலையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் கண்ணதாசன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.









