வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு: நாமக்கல் மாவட்டத்தில் நாளை முழு கடையடைப்பு

சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :25 ஜூன் 2020, 5:42 am

DIN



நாமக்கல்: சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே காவல் துறை இயக்குநர் திதிரிபாதியை நேரில் சந்தித்து உடனடி நடவடிக்கை கோரி மனு அளித்திருந்தார். காவல்துறை இயக்குநரும் இதற்கு 48 மணி நேர கால அவகாசம் கேட்டிருந்தார். 

தற்போது உடல் கூறு பரிசோதனை முடிவடைந்துவிட்ட நிலையில், சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகையை அதிகரிக்க வேண்டும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, வணிகர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து அன்று மாலை 5 மணியளவில் அனைத்து வணிகர் இல்லங்களில் மறைந்த வணிகர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

எனவே நாமக்கல் மாவட்ட வணிகர்கள் நாளை ஒரு நாள் தங்களின் வணிக நிறுவனங்களை முழுமையாக அடைத்து நமது ஆதங்கத்தையும், எதிர்ப்பினையும் தெரிவிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.