விழுப்புரம் அருகே தலைமைச் செயலக ஊழியர் வீட்டில் கொள்ளை
வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.


விழுப்புரம் அருகே தலைமைச் செயலக ஊழியர் வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.
விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்( 38 ). இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு கிடங்கில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது, மனைவி திவ்யா( 32). இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலகம் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு ஆனந்தன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே படுத்து தூங்கினர்.
நள்ளிரவில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
காலையில் எழுந்து பார்த்த ஆனந்தன், வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...