47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இறந்த முதியவரின் சடலத்தை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் காட்டிய திருப்பூர் மருத்துவக் கல்லூரி

திருப்பூரில் இறந்த முதியவரின் சடலத்தை அப்புறப்படுத்துவதில் அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2020, 12:58 pm

DIN

திருப்பூரில் இறந்த முதியவரின் சடலத்தை அப்புறப்படுத்துவதில் அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த அம்மா உணவகத்துக்கு சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வியாழக்கிழமை பிற்பகல் 12.30 மணி அளவில் வந்துள்ளார். இதன் பிறகு உணவு அருந்தி விட்டு வெளியே வந்த முதியவர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளனர். 

மேலும், இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி அவரச சிகிச்சைப் பிரிவுக்கும் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மயங்கிய நிலையில் இருந்த முதியவர் வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்களும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

ஆனால் அதன் பிறகும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் முதியவரின் சடலத்தை அப்புறப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதையடுத்து, ஒரு வழியாக 4 மணி நேரத்துக்குப் பின்னர் வியாழக்கிழமை பிற்பகல் 5 மணி அளவில் முதியவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். 

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலத்தை அப்புறப்படுத்துவதில் ஊழியர்கள் அலட்சியம் காட்டியதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க. விஜய கார்த்திகேயன் இடம் செய்தியாளர்கள் கேட்டபோது, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.