மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கரோனா: வேதாரண்யம் அருகே கிராமத்தினர் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல்

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அடுத்து அந்த கடை மூடப்பட்டது.

News image

உம்பளச்சேரி கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட் டத்தல் ஈடுபட்ட கிராமத்தினர்.

Updated On :26 ஜூன் 2020, 7:35 am

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம்  அருகே ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அடுத்து அந்த கடை மூடப்பட்டது.

பிராந்தியங்கரை அண்டகத்துறை பகுதியில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த உம்பளச்சேரி கிராம பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை திறக்க கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஊராட்சி துணைத் தலைவர் லெட்சுமி தலைமையில் கிராமத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.