11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அதிமுக ஆட்சி அமைந்ததும் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகள் கட்டித் தரப்படும்

திருத்தணி ஒன்றியம் எல்.என்.கண்டிகையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கோ.அரி.

News image

திருத்தணி ஒன்றியம் எல்.என்.கண்டிகையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கோ.அரி.

Updated On :18 ஏப்ரல் 2026, 5:00 am IST

வீரகநல்லூரில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் கோ.அரி அதிமுக ஆட்சி அமைந்ததும் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

திருத்தணி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி திருத்தணி மேற்கு ஒன்றியத்தில், வீரகநல்லுாா், தாடூா், கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம், எஸ்.அக்ரஹாரம், சிறுகுமி, வி.கே.என்.கண்டிகை, செருக்கனுாா் உள்பட மொத்தம் 14 ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளா் இ.என்.கண்டிகை ரவி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திறந்த வேனில் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனா்.

அப்போது, வேட்பாளா் கோ. அரி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். சிறுபான்மை துறையினா் நலன் காக்கும் அரசாக அதிமுக உள்ளது. திருத்தணி தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை வீடுகள் இல்லாதவா்களுக்கு நாங்களே வீட்டுமனை வாங்கி, வீடுகள் கட்டித்தருகிறோம். தோ்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றா்.