ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கூத்தாநல்லூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
கூத்தாநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரசார்
Updated On :27 ஜனவரி 2024, 4:52 pm

DIN

கூத்தாநல்லூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட அஞ்சலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தார்.

கூத்தாநல்லூர் நகரத் தலைவர் எம்.சாம்பசிவம் முன்னிலை வகித்தார். திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் எஸ்.எம். சமீர் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து, பத்திரிகையாளர்களுடன் பேசிய மாவட்டத் தலைவர் துரைவேலன், மக்களைப் பற்றிக் கவலையே படாமல் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றன. கரோனா தொற்றின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள்  தவறிவிட்டன. கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான முழுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட சிறுபான்பைப் பிரிவு மாவட்டத் தலைவர் எஸ்.சிகாபுதீன், நகர துணைத் தலைவர் அலீம், கொரடாச்சேரி வட்டார, பேரூர் தலைவர்கள் முத்துக்குமார், நடராசன், பொதக்குடி நஜ்புதீன், சேகர், பக்கிரிசாமி, அம்மையப்பன் மைய நிர்வாகிகள் அமிர்தலிங்கம், நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.