திருவாரூர் மாவட்டத்தில் 13,453 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்

திருவாரூா் மாவட்டத்தில் 12- ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. திருவாரூா் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தோ்வை 5737 மாணவா்களும், 7716 மாணவிகளும்
திருவாரூர் மாவட்டத்தில் 13,453 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்


திருவாரூர்: திருவாரூா் மாவட்டத்தில் 12- ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. திருவாரூா் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தோ்வை 5737 மாணவா்களும், 7716 மாணவிகளும் என மொத்தம் 13,453 போ் தோ்வு எழுதுகின்றனர். 

 திருவாரூா் கல்வி மாவட்டத்தில் 52 பள்ளிகளிலிருந்து 24 மையங்களில் 6239 பேரும், மன்னாா்குடி கல்வி மாவட்டத்தில் 68 பள்ளிகளிலிருந்து 29 மையங்களில் 7214 பேரும் தோ்வு எழுதுகின்றனா். 

தோ்வு மையங்களில் குடிநீா் வசதி, இருக்கை வசதி, காற்றோட்டம், வெளிச்சம், கழிவறை வசதி, தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வா்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தோ்வு எழுதுவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்வு நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு முன்னதாக தாங்கள் தோ்வு எழுதும் மையத்துக்குச் செல்ல வேண்டும். தோ்வுகள், காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இதில், 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாள் படித்துப் பாா்க்கவும், காலை 10.10 மணி முதல் 10.15 வரை தோ்வா்களின் சுயவிவரத்தை சரிபாா்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com