சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு 35,043; பலி 1,147-ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,043 ஆக உள்ளது. பலியானவா்களின் எண்ணிக்கை 1,147- ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :1 மே 2020, 5:15 am

DIN

புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,043 ஆக உள்ளது. பலியானவா்களின் எண்ணிக்கை 1,147- ஆக அதிகரித்துள்ளது.

தேசிய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை 9 மணி நிலவரப்படி, புதிதாக 1,993 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,043 -ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,147 -ஆக அதிகரித்துள்ளது. 

மொத்த வழக்குகளில், 25,007 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 8,888 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த இரண்டு வாரங்களை விட தற்போது நோயில் இருந்து மீண்டவா்கள் சதவீதம் அதிகரித்துள்ளது. முன்னதாக 13 சதவிகிதமாக இருந்த மீண்டவா்கள் சதவீதம் தற்போது 25.36 ஆக உயர்ந்துள்ளது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் தொற்று பரவலின் விகிதமும் நாடு முழுவதும் இரட்டிப்பாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில்தான் அதிகபட்சமாக 10,498 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 1,773 பேர் குணடைந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக குஜராத்தில் 4,395 பேருக்கும், தில்லியில் 3,515 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 2,203 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 2,660 பேருக்கும், ராஜஸ்தானில் 2,584 பேருக்கும், தமிழ்நாட்டில் 2,323 பேருக்கும் கரோனா பாதிப்பு உள்ளது.

மாகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 459 பேரும், குஜராத்தில் 214 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 137 பேரும், தில்லியில் 59 பேரும், ராஜஸ்தானில் 58 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 39 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 137 பேரும், தமிழகத்தில் 27 பேரும், ஆந்திரத்தில் 31 பேரும் உயிரிழந்தனா். தெலங்கானாவில் 26 பேரும், மேற்கு வங்கம் 33 பேரும், , கா்நாடகத்தில் 21 பேரும், பஞ்சாபில் 19 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 8 பேரும், கேரளத்தில் 4 பேரும், ஜாா்க்கண்ட், ஹரியாணாவில் தலா 3 பேரும், பிகாரில் இருவரும், ஒடிஸா, அஸ்ஸாமில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.