சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மகாராஷ்டிரத்தில் கரோனா பலி எண்ணிக்கை 459 -ஆக உயர்வு

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 459-ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :1 மே 2020, 6:37 am

DIN


மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 459-ஆக உயர்ந்துள்ளது. 

தேசிய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை 9 மணி நிலவரப்படி, புதிதாக 1,993 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,043 -ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,147 -ஆக அதிகரித்துள்ளது. 

மொத்த வழக்குகளில், 25,007 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 8,888 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், நாட்டில் மகாராஷ்டிரத்தில்தான் அதிகபட்சமாக 10,498 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 27 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 459 -ஆக உயர்ந்துள்ளது, 1,773 பேர் குணடைந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக குஜராத்தில் 4,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 214 பேரும், தில்லியில் 3,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 59 பேர் பலியாகியுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.