சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606-ஆக உயர்வு 

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். 

News image
Updated On :3 மே 2020, 8:16 am

DIN

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். 

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்களோடு ஏற்பட்ட தொடா்பின் காரணமாக, சனிக்கிழமை புதிதாக 12 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 3 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். கலபுா்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 3 பேர், இருவர் மாநிலத்தின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் ஒரு நோயாளி கடுமையான சுவாச நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதுவரை மாநிலத்தின் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை 606 -ஆக உயர்ந்துள்ளது. 271 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 304 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். 25 போ் இறந்துள்ளனா்.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இதுவரை 1.4 லட்சம் பேரை பரிசோதிச்சுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.