அம்பாசமுத்திரம் அருகே கள்ள நோட்டு வைத்திருந்ததாக ஒருவர் கைது: ரூ. 65,000 கள்ளப் பணம் பறிமுதல்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக சிறப்பு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அம்பாசமுத்திரம் பகுதியில் காவலர்கள் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 
பறிமுதல் செய்யப்பட்ட கள்ளப் பணம்
பறிமுதல் செய்யப்பட்ட கள்ளப் பணம்

அம்பாசமுத்திரம்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக சிறப்பு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அம்பாசமுத்திரம் பகுதியில் காவலர்கள் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 

விசாரணையில், அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் மகேந்திரன் என்பவர் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டுவருவது தெரியவந்ததை அடுத்து அவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 65,000 கள்ளப் பணம் மற்றும் ஒரு மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மகேந்திரன் 2008 -ஆம் ஆண்டு வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் ஆவார். 

மேலும் இவர் மீது தென்காசி வள்ளியூர் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com