தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்: கரோனாவால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநர் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

News image
Updated On :30 மே 2020, 3:01 am

DIN

நாமக்கல்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநர் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுமுதல் உயிரிழப்பாகும்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 77 பேர் பாதிக்கப்பட்டனர். சேலம், கரூர் , நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் பூரண குணம் அடைந்தனர். இதனால் கடந்த 20 நாட்களாக எவ்வித தொற்றும் ஏற்படவில்லை. சிகப்பு மண்டல பட்டியலில் இருந்த நாமக்கல் மாவட்டம் ஆரஞ்சு பட்டியலுக்கு மாறியது.  அண்மையில் தில்லியிலிருந்து மல்லசமுத்திரம் வந்த தந்தை, மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் மும்பையிலிருந்து மல்லசமுத்திரம் அருகேயுள்ள சௌதாபுரம் கிராமத்திற்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஹைதராபாத்திலிருந்து திருச்செங்கோடு கூத்தப்ப்பள்ளி கிராமத்துக்கு வந்த 47 வயது லாரி ஓட்டுநருக்கும் தொற்று உறுதியானது. இவர்களும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் லாரி ஓட்டுநரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. கரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் அவரை கரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. 

இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை அந்த லாரி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்தில் கரரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் இதுவரை ஒருவர் கூட உயிரிழக்காத நிலையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது மாவட்ட நிர்வாகத்தையும், அரசு மருத்துவர்களையும் கவலையடைய செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.