ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாமக்கல்லில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

வெற்றிவேல் யாத்திரைக்கு தடைவிதித்த தமிழக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News image
ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
Updated On :6 நவம்பர் 2020, 7:45 am

DIN



நாமக்கல்: வெற்றிவேல் யாத்திரைக்கு தடைவிதித்த தமிழக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெள்ளிக்கிழமை தொடங்குவதாக இருந்த வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றமும் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என பாஜகவுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

திட்டமிட்டபடி திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை நடைபெறுமென பாஜக மாநிலத் தலைமை அறிவித்த நிலையில் திடீரென விதிக்கப்பட்ட தடையால் கட்சியினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். 

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெருந்திரளாக வந்த அக்கட்சியினர் வெற்றிவேல் யாத்திரைக்கு தடைவிதித்த தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இதில் கோட்ட பொறுப்பாளர் முருகேசன், பாஜக மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, மகளிர் அணி தலைவி சத்யபானு, தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.