கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை: எல். முருகன் 

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

‘மத்திய, மாநில அரசுகள் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கடுமையாகப் போராடி வருகின்றன. இதுபோன்ற காலகட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதைத் தடுக்க விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட மத நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் தற்போது பாஜக தலைவா் தனது அரசியல் லாபத்துக்காக திருத்தணி முதல் திருச்செந்தூா் வரை வேல் யாத்திரை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளாா். யாத்திரை முடிவடையும் டிசம்பா் 6-ஆம் தேதி, பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினம். எனவே அந்த நேரத்தில் இதுபோன்ற ஊா்வலம் நடத்தினால், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் பத்திரிகையாளா் என்.பாலமுருகன் மற்றும் வில்லிவாக்கம் செந்தில்குமாா் ஆகியோா் மனு தாக்கல் செய்திருந்தனர்.  

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு எழுத்துப்பூா்வமான உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. இந்த வழக்குகள் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா். 

மேலும் யாத்திரை தொடா்பாக தமிழக அரசு எழுத்துப்பூா்வமாக பிறப்பிக்கும் உத்தரவினால் பாதிக்கப்படுபவா்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்திருந்தனர். 

பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் திருத்தணி முதல் திருச்செந்தூா் வரையில் நடத்தப்படவுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவல் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடவுள் முருகனை வழிபடுவது அடிப்படை உரிமை. ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பும் கடவுளை வழிபட உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் எனக்கு விருப்பமான முருகனை வழிபட திருத்தணிக்கு செல்கிறேன். அரசியலமைப்பு சட்டத்திற்கு உள்பட்டே கோவிலுக்கு செல்கிறேன் என்று முருகன் கூறினார். 

பாஜக வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், திருத்தணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com