பாகிஸ்தானில் புதிய உச்சம்: ஒரே நாளில் 1,808 பேருக்கு கரோனா
பாகிஸ்தானில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 1,808 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
பாகிஸ்தானில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 1,808 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா பரவிலின் 2ம் அலை தாக்கத் தொடங்கிய பிறகு ஒரே நாளில் அதிக எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,808 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 349,992 ஆக உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 34 பேரும், மொத்தம் 7,055 பேரும் பலியாகியுள்ளார்கள்.
மேலும், தொற்றில் இருந்து 784 பேர் மீண்டுள்ளனர், மொத்தமாக 3,20,849 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 22,088 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மருத்துவ சங்கம் (பி.எம்.ஏ) ஏற்கனவே கரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்படுமென எச்சரிக்கை விடுத்ததுடன், நெறிமுறைகளை பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...