மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கர்நாடகத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) கல்லூரிகள் திறப்பு

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கர்நாடகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 நவம்பர் 2020, 10:37 am

PTI

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கர்நாடகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. தற்போது தொற்றின் பரவல் நிலையின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கர்நாடக மாநிலத்தில் நாளை கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.

கல்லூரிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் கிருமிநாசிகளைப் பயன்படுத்துதல் ஆகியவைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கிருமிநாசிகளைக் கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. 

கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கரோனா பரிசோதனை செய்து அதன் முடிவை சமர்பிக்க வேண்டும், மாணவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆட்சேபனை இல்லாத சான்றிதழை பெற்று வரவேண்டும் என அரசுத் தரப்பில் அறிவுருத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கல்லூரிக்கு வருவதும், வீட்டிலிருந்தே இணைய கல்வி கற்பதும் மாணவர்களின் விருப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கா்நாடகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை டிசம்பா் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும். அத்துடன் பல் மருத்துவம், ஆயுஷ், செவிலியா் கல்லூரி, மருந்தாளுநா் கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.