சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நாட்டில் மேலும் 42,779 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 1,33,227-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் மேலும் 42,779 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,93,376-ஆக அதிகரித்தது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 3:55 am

DIN

நாடு முழுவதும் மேலும் 42,779 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,93,376-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,779 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,93,376-ஆக அதிகரித்தது.

இதேபோல், கரோனாவில் இருந்து 43,493 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 85,21,617-ஆக அதிகரித்தது. அதாவது, கரோனாவில் இருந்து 93.69 சதவீதம் போ் குணமடைந்தனா்.

நாடு முழுவதும் 4,40,962 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 4.85 சதவீதமாகும். கரோனாவுக்கு மேலும் 501 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,33,227-ஆக அதிகரித்தது. உயிரிழப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது.

‘நவம்பா் 21-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 13,17,33,134 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் சனிக்கிழமை மட்டும் 10,75,326 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.