விவசாயிகள் பேரணி: பாதுகாப்பு வளையத்திற்குள் தில்லி

வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லி நோக்கி விவசாயிகள் பேரணி செல்வதால் தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கு எல்லையில் பலத்த பாதுகாப்பு
சிங்கு எல்லையில் பலத்த பாதுகாப்பு

வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லி நோக்கி விவசாயிகள் பேரணி செல்வதால் தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) தில்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கு எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் காவல் கண்காணிப்பாளர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா 
சிங்கு எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் காவல் கண்காணிப்பாளர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா 

பேரணிக்கு தில்லி காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கு எல்லையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்
சிங்கு எல்லையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்

மேலும், தில்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறது, இதனால் தில்லியின் எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com