மத்திய பிரதேசத்தில் பிறந்து இரண்டு நாள்களே ஆன பச்சிளம் குழந்தை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.
போபாலின் அயோத்தி நகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகில் துணியால் சுத்தி மூடப்பட்ட நிலையில் பெண் குழந்தையின் உடலை பொதுமக்கள் கண்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், காவல்துறையினர், ஆரம்பத்தில் புதிதாகப் பிறந்த குழந்தையை யாரோ கோவிலுக்கு அருகில் விட்டுவிட்டு, விலங்குகள் குழந்தையை கடித்திருக்கலாம் என நினைத்தனர்.
ஆனால் பிரேத பரிசோதனை முடிவில், பிறந்து இரண்டு நாளே ஆன அந்த குழந்தையை கூர்மையான ஆயுதத்தால் சுமார் 100 க்கும் மேற்பட்ட முறை குத்திக் கொன்றுள்ளதாக தெரிவித்தனர்,
இதையடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கேமராக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போபால் நகரில் கடந்த 2 வாரத்தில் 3 குழந்தைகளின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


