6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் திருடு போன 116 வாகனங்கள் மீட்பு : 14 பேர் கைது

தில்லியில் திருடு போன 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதை திருடிய 14 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

News image
கோப்புப் படம்
Updated On :2 அக்டோபர் 2020, 12:38 pm

PTI

தில்லியில் திருடு போன 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதை திருடிய 14 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இந்த 14 பேரைக் கொண்ட கும்பலின் தலைவராக 89 குற்ற வழக்குகளில் தொடர்புடைய விக்ரம் என்பவர் செயல்பட்டது தெரியவந்துள்ளது. 

திருடியவுடன் அந்த வாகனங்களை அருகிலுள்ள பூங்காக்கள், பார்க்கிங் போன்ற இடங்களில் நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாக செய்துள்ளனர்.

இந்நிலையில், செப்டம்பர் 25 ஆம் தேதி, மங்கோல்பூரியின் தொழில்துறை பகுதியில் இரண்டு வாகனங்கள் வெகு நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனங்கள் திலக் நகர் மற்றும் தெற்கு ரோகிணி பகுதிகளில் இருந்து திருடப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அந்த வாகனத்தை எடுக்க வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில், மேலும் 10 பேர் சிக்கினார்கள்.  

இதனையடுத்து, அவர்கள் திருடிய 39 உயர்தர வாகனங்கள் உள்பட 116 வாகனங்களை காவல் துறையினர் மீட்டதாக துணை ஆணையர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.