பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராகுல் டிராக்டர் பேரணி தடுத்து நிறுத்தம்

ராகுல் காந்தியின் டிராக்டர் பயணத்தை ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தியதை அடுத்து 5 ஆயிரம் மணிநேரம் ஆனாலும் காத்திருப்பேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
ராகுல் டிராக்டர் பேரணி தடுத்து நிறுத்தம்
Updated On :6 அக்டோபர் 2020, 12:22 pm

DIN

ராகுல் காந்தியின் டிராக்டர் பயணத்தை ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தியதை அடுத்து 5 ஆயிரம் மணிநேரம் ஆனாலும் காத்திருப்பேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக கடந்த 3 நாள்களாக டிராக்டர் பேரணியில் பிரசாரம் செய்து வருகின்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி. 

இந்நிலையில் இன்று பிற்பகல் ஹரியாணா எல்லையில் ராகுல் காந்தி சென்ற டிராக்டர் பேரணியை 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து சுட்டுரையில் ராகுல் காந்தி கூறியதாவது, ஹரியாணா எல்லையில் எங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இங்கு காத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் இந்த இடத்தைவிட்டு 5 ஆயிரம் மணிநேரம் ஆனாலும் நகரப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.