ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

கொல்கத்தா-சென்னை வழித்தடத்தில் ரயில் விபத்து

கொல்கத்தா-சென்னை வழித்தடத்தில் ஒடிசா அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதால் அந்த வழித்தடத்தில் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :6 அக்டோபர் 2020, 9:33 am

PTI

கொல்கத்தா-சென்னை வழித்தடத்தில் ஒடிசா அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதால் அந்த வழித்தடத்தில் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் எல்லைக்குட்பட்ட தமாராவிலிருந்து ஹால்டியாவிற்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் சோரோ ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தபோது பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த கம்பி மீது மோதி விபத்துள்ளானது.

பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், விரைவில் ரயில் சேவைகள் தொடங்கும் என்றும் ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

இந்த ரயில் பாதை தென்கிழக்கு பகுதிகளில் இருந்து சென்னை வருவதற்கான பிரதான பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.