நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘சூரரைப்போற்று’ திரைப்படம் வெளியாவதில் தாமதம் : நடிகர் சூர்யா

சூரரைப்போற்று திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image

நடிகர் சூர்யா

Updated On :22 அக்டோபர் 2020, 4:18 pm

DIN

சூரரைப்போற்று திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா வியாழக்கிழமை தெரிவித்தார்.

இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.

கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.

சூரரைப் போற்று படம், அக்டோபர் 30-ல் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அமேசான் பிரைம் மூலமாக 200 நாடுகளில் சூரரைப் போற்று படம் வெளியாகும் என 2டி நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சூரரைப் போற்று படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30 அன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் சூர்யா டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்படம் வெளியிட பெற வேண்டிய சில தடையில்லா சான்றைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் திரைப்படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.