சென்னை சொதப்பல் ஆட்டம் : மும்பைக்கு 115 ரன்கள் இலக்கு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
13-வது ஐபிஎல் சீசனின் 41-வது ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் சார்ஜாவில் இன்று (வெள்ளிக்கிழமை) விளையாடுகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் போலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக இன்று விளையாடததை அடுத்து போலார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர்களாக ருத்துராஜ், டூ பிளஸிஸ் ஜோடி முதல்முறையாக களமிறங்கியது.
முதல் ஓவரிலேயே போல்ட் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாது ருத்துராஜ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.
இரண்டாவது ஓவர் வீசிய பும்ரா, சென்னை அணியின் ராயுடு (2) மற்றும் ஜெகதீசனை (0) அடுத்தடுத்து வெளியேற்றி சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
போல்ட் வீசிய 3வது ஓவரிலேயே பிளஸீஸை (1) அவுட்டாகினார்.
அடுத்து களமிறங்கிய தோனி (16) மற்றும் ஜடேஜா (7) சற்று பொறுமையாக ஆடினாலும் அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
பின் களமிறங்கிய தீபக் (0) மற்றும் தாகூர் (11) விரைவில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள்.
இறுதி கட்டத்தில் சாம் கர்ரனுடம் தாஹிர் இணைந்து அணியின் ரன்னை சற்று உயர்த்தினார்கள்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டுமே இருந்தது.
அரைசதம் அடித்த சாம் 52 ரன்களுக்கு கடைசி பந்தில் போல்டானார். தாஹிர் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக போல்ட் (4), பும்ரா (2) மற்றும் ராகுல் (2) விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...