நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி: ஒன்றரை வயது பெண் குழந்தை சாவு

அவிநாசி அருகே பெரியாயிபாளையம் இரு குழந்தைகளுக்கு சாணிப் பவுடர் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், ஒன்றரை வயது பெண் குழந்தை வியாழக்கிழமை இரவு உயிரிழந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :29 அக்டோபர் 2020, 4:15 pm

DIN

அவிநாசி: அவிநாசி அருகே பெரியாயிபாளையம் இரு குழந்தைகளுக்கு சாணிப் பவுடர் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், ஒன்றரை வயது பெண் குழந்தை வியாழக்கிழமை இரவு உயிரிழந்தது.

அவிநாசி அருகே பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் தனது இரு பெண் குழந்தைக்கும் சாணிப்பவுடர் கொடுத்து விட்டு, சத்யாவும் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் அனனியா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

மேலும் மூத்த பெண் குழந்தையும், தாய் சத்யாவும் தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அவிநாசி காவல்துறை விசாரிக்கின்றனர். இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் அவிநாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.