சிதம்பரத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சிதம்பரம்: தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரில் உள்ள 168 நியாயவிலைக்கடைகள் மூடப்பட்டிருந்தன.
கரோனா வைரஸ் தொற்று மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்களையும் சேர்க்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து அத்தியாவசிய பொருள்கள் நூறு சதவீதம் வழங்க வேண்டும்.
கரோனா தொற்றால் மரணமடைந்த திருத்தணி வட்டம் அன்பழகன், மதுரை கார்த்திகேயன், திண்டுக்கல் ராமராஜ், சின்னமனூர் சேகரன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் எங்களுக்கு இரட்டிப்பு சம்பளம், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ஊக்கத் தொகை ரூ.2500 இதுவரை வழங்கப்படவில்லை. இடை நில்லா பயண செலவு மே மாதத்திற்கு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியும் பல கூட்டுறவு சங்கங்கள் வழங்காததை கண்டிக்கிறோம். மேலும் மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ஊக்கத் தொகையும், இடைநில்லா பயண செலவிற்கான தொகையும், மாநிலம் முழுவதும் உடன் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா தெரிவித்தது: மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு கட்ட பேராட்டங்களை நடத்தியும், பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
தமிழகத்தில் மொத்தம் 33 ஆயிரம் நியாயவிலைக்கடைகளில் சுமார் 25 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 1100 கடைகள் தி்ங்கள்கிழமை அடைக்கப்பட்டுள்ளன. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...