சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது -ராகுல் காந்தி

மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

News image
மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது -ராகுல் காந்தி
Updated On :2 செப்டம்பர் 2020, 5:57 am

ANI

மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி சுட்டுரையில் கூறியதாவது, மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது. வரலாறு காணாத உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி-23.9%, 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை, 12 கோடி பேருக்கு வேலை இழப்பு, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை செலுத்தவில்லை, உலகளவில் அதிகளவில் கரோனா பாதிப்பு மற்றும் எல்லையில் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் கடந்த சில நாள்காளாக மத்திய அரசை பொருளாதாரத்தை கையாளுதல், கரோனா தொற்று மற்றும் இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.