4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

நியூஸிலாந்தில் 3 மாதத்திற்கு பிறகு கரோனாவால் ஒருவர் பலி

நியூஸிலாந்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று கரோனாவால் ஒருவர் பலியாகியுள்ளார்.

News image

நியூஸிலாந்தில் 3 மாதத்திற்கு பிறகு கரோனாவால் ஒருவர் பலி (கோப்புப்படம்)

Updated On :4 செப்டம்பர் 2020, 8:06 am

PTI

நியூஸிலாந்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று கரோனாவால் ஒருவர் பலியாகியுள்ளார்.

நியூஸிலாந்தில் 100 நாள்களாக தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆக்லாந்து நகரில் கரோனா பரவல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆக்லாந்து மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 50 வயதுடைய ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில் கரோனா வைரஸின் கட்டுபாடுகள் குறைந்தது செப்டம்பர் பாதி வரையில் தொடரும் என கூறினார். 

நியூசஸிலாந்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 2 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப் பட்டவர்கள், மேலும் 3 பேர் ஆக்லாந்து சமூக பரவலால் பாதிக்கப்பட்டவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.