4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

உத்தரகண்ட் மாநில அமைச்சருக்கு கரோனா உறுதி

உத்தரகண்ட் மாநில அமைச்சர் மதன் கெளசிக்கிற்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image

உத்தரகண்ட் மாநில அமைச்சர் மதன் கெளசிக்

Updated On :7 செப்டம்பர் 2020, 9:50 am

PTI

உத்தரகண்ட் மாநில அமைச்சர் மதன் கெளசிக்கிற்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் அமைச்சர் மதன் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சோதனை செய்தார்.

இரண்டு முறை செய்யப்பட்ட சோதனையில் அமைச்சர் மதனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தன்னுடன் தொடர்பில் இருந்த அரசியல் கட்சியினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சோதனை செய்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வாரம் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மதன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் அமைச்சர் சுபோத் யூனியல் மற்றும் அவரது குடும்பத்தினர், ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.