பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.30-ம் தேதி தீர்ப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.30-ம் தேதி தீர்ப்பு
Published on
Updated on
1 min read

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.

இதுகுறித்து சிபிஐ வழக்கறிஞர் லலித் சிங் கூறுகையில், 

பாபர் மசூதி இடிப்பின் அனைத்து விசாரணைகளும் செப்டம்பர் 1-ம் தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதத் தொடங்கியுள்ளனர்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் 351 சாட்சிகளும், 600க்கும் மேற்பட்ட ஆவண ஆதாரங்களைளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பானது வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கவுள்ளது என கூறினார்.

இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் செப்டம்பர் 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com