தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமித் ஷா
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை மாலை வீடு திரும்பினார்.


தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை மாலை வீடு திரும்பினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்க இருந்த நிலையில், அண்மையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா, கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை முடிந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி அவா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.
அவ்வாறு அவா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது அளிக்கப்பட்ட மருத்துவ ஆலோசனையின்படி, நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக ஒன்று அல்லது இரண்டு நாள்கள் தங்கியிருந்து முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதற்காக மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
தற்போது முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்ட அமித் ஷா 6 நாள்களுக்கு பின் இன்று மாலை வீடு திரும்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...