பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சீர்காழி அருகே ஆடு திருடிக்கொண்டு வந்த இருசக்கர வாகனம் விபத்து: ஒருவர் பலி; 2 பேர் காயம்

சீர்காழி அருகே ஆடு திருடிக்கொண்டு வந்த இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர்.

News image
இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர்.
Updated On :19 செப்டம்பர் 2020, 9:44 am

DIN



சீர்காழி: சீர்காழி அருகே ஆடு திருடிக்கொண்டு வந்த இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சுனாமி நகரில் வசித்து வருபவர் சுரேஷ் (30) கொத்தனார் வேலை பார்த்து வந்தார், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் நண்பர்களான பாண்டித்துரை, அரவிந்த் உள்ளிட்ட 3 பேரும் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று பக்கத்து கிராமமான பழையார் கிராமத்தில் ஆடு திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்தி வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், கூழையார் பிரதான சாலை ஒரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுரேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆடு திருடிய சம்பவத்தை மறைப்பதற்காக சுரேஷின் உடலை  காயமடைந்த நண்பர்களான இருவரும் இரவோடு இரவாக சுரேஷின் வீட்டு வாசலில் போட்டுவிட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகன விபத்து என கூறி சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். 

இதுகுறித்து சீர்காழி  காவல்நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆடு திருடியதை மறைக்கவே கொலை என நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.