உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு பிரான்சில் பலியானவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 9 ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும், 14 லட்சத்து 31 ஆயிரத்து 689-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 82 ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 2 ஆயிரத்து 142 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
நோய்த்தொற்றுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் நோய்த்தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 417 பேர் பலியாகியுள்ள நிலையில், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக பிரான்சில் கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் இந்த நோய்த்தொற்றின் தீவிரத்தை உணராமல், பாதுகாப்பின்றி வெளியில் சுற்றி வருவதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


