நியூயார்க்: அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 2,292 பேர் பலியாகினர். இதனால் அங்கு நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,243 -ஆக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க வாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் 210 நாடுகள் வரை பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், நோய்த்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் உலகளவில் இதுவரை 27,25,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,91,055-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் 7,45,819 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் வியாழக்கிழமை ஒரே நாளில் 2,292 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அமெரிக்காவில் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 243 -ஆக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க வாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,86,790 -ஆக அதிகரித்துள்ளது, குணமடைந்தோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 922 -ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


