கரோனா: மகாராஷ்டிரத்தில் 90 நாள்களில் 5,537 பலி
By DIN | Published On : 17th June 2020 04:22 PM | Last Updated : 17th June 2020 04:51 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
மும்பை: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு, பலி எண்ணிக்கையை பொருத்தவரை, முதலிடத்தில் இருந்து வரும் மகாராஷ்டிரம் மாநிலத்தில் 90 நாள்களில் 5,537 பேர் பலியாகியுள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 62 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,974 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,54,065-ஆக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில், கரோனாவால் 2,003 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,903-ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,409 போ் பலியாகினா். பாதிக்கப்பட்டோரில், 1,55,178 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,86,935 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். குணமடைந்தோரின் சதவீதம் 50 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து ஆறாவது நாளாக 10,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் நேரிட்ட 2,003 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,409 போ் பலியாகினா். மொத்த பலி எண்ணிக்கையை பொருத்தவரை, மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 5,537 பேர் பலியாகியுள்ளனர்.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்படி, மார்ச் 17 ஆம் தேதி மும்பையில் கஸ்தூர்பா மருத்துவமனையில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 64 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்ததே மாநிலத்தில் முதல் கரோனா பலி. மாநிலத்தில் கடந்த 90 நாள்களில் 5,537 பேர் பலியாகியுள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 62 பேர் பலியாகியுள்ளனர்.
மார்ச் 9 அன்று கரோனா தொற்று பாதிப்பு இரண்டாக இருந்த நிலையில் இன்று 1,13,445 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 100 நாள்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 1,260 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்கு பலியான முதல் நோயாளி அதாவது மார்ச் 17 முதல் ஏப்ரல் 17 வரை மாநிலத்தில் 201 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3,320 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இது மே 17 ஆம் தேதிக்குள் 10 மடங்காக அதிகரித்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 33,053 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்தது. இது இன்று மூன்று மடங்காக அதிகரித்து இதுவரை 1,13,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்து இதுவரை 5,537 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
தற்போது, 99,467 நோயாளிகளைக் கொண்ட கனடாவை மகாராஷ்டிரம் விஞ்சியுள்ளது.
அதேசமயம், நம்பமுடியாத அளவிற்கு குணமடைந்தோரின் சதவீதம் 50.99 ஆகவும், ஜூன் 15 வரை பலியானோரின் சதவீதம் 3.70 ஆக இருந்த நிலையில், ஜூன் 16 அன்று திடீரென 4.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தின் பின்னணியில் இதை பார்த்தால், ஒரு கட்டத்தில் மாநிலத்தின் பலி எண்ணிக்கை சதவீதம் உலகிலேயே மிக அதிகமாக இருந்தது, இது சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இருப்பினும், மாநில அரசாங்கத்தின் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கையின் முயற்சியால், இறப்பு சதவீதம் படிப்படியாக 3.70 சதவீதமாகக் குறைந்தது, இது உலக சராசரியுடன் (5.52) ஒப்பிடும்போது, தேசிய சராசரிக்கு (2.89) நெருக்கமாக இருந்தது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை மாநில சுகாதாரத்துறை புள்ளிவிவரங்களின் படி மீண்டு இறப்பு எண்ணிக்கை சதவீதம் 4.08 ஆக (ஜூன் 16) உயர்ந்துள்ளது.
கண்ணுக்குத் தெரியாத கரோனா தொற்றை அழிப்பதில் நம்பிக்கை உள்ளது - பொது முடக்கம் 5.0 நீட்டிக்க வாய்ப்புகள் உள்ளன.
மார்ச் 31-க்குளான, முதல் கட்ட பொது முடக்கத்தின் போது, மும்பையில் 7 உயிரிழப்புகளும், 151 தொற்று பாதிப்புகள் உள்பட மொத்தம் 10 உயிரிழப்புகளுடன் 302 தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 15- க்குளான இரண்டாவது கட்ட பொது முடக்கத்தின் போது மும்பையில் 114 உயிரிழப்புகளும், 1,896 தொற்று பாதிப்புகள் உள்பட மொத்தம் 2,916 தொற்று பாதிப்புகளுடன் 187 உயிரிழப்புகளை அரசு பதிவு செய்திருந்தது.
ஏப்ரல் 30 -க்குள்ளான மூன்றாவது கட்ட பொது முடக்கத்தின் போது, மும்பையில் 290 உயிரிழப்புகளும், 7,061 தொற்று பாதிப்புகள் உள்பட மொத்தம் 10,498 தொற்று பாதிப்புகளுடன் 459 உயிரிழப்புகள் பதிவாகி இருந்தது.
பொது முடக்கத்தை எளிதாக்கியதின் மூலம் ஜூன் 16 -க்குள் கரோனா தொற்று பரவல் மாநிலத்தின் 36 மாவட்டங்களுக்கும் பரவியது.
மகாராஷ்டிரத்தில் இதுவரை மொத்தம் 1,13,445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 5,537 பேர் உயிரிழந்துள்ளனர். 3,167 உயிரிழப்புகள் மற்றும் 60,228 தொற்று பாதிப்புகளுடன் இந்தியாவின் "கரோனா தலைநகராக" மும்பை உருவெடுத்துள்ளது.
ஜூன் மாதத்தில் மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டாவது இடத்தைப் பிடித்த, மும்பையின் அருகிலுள்ள தானே மாவட்டத்தில் 641 உயிரிழப்புகள் மற்றும் 19,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், புணேயில் இப்போது 588 உயிரிழப்புகள் மற்றும் 12,888 தொற்று பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மும்பை பெருநகர பிராந்தியத்தில் (தானே பிரிவு - மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் மாவட்டங்களில்) 84,121 நோயாளிகளும், 3,976 பேர் உயிரிழந்துள்ளனர். புணே பிரிவு (புணே, சோலாப்பூர், சதாரா மாவட்டங்களில்) 15,603 நோயாளிகளும், 806 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான, தாராவியில் தொற்றுக்கு இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவே மகாராஷ்டிரத்தின் 'வூஹான்' என்று அழைக்கப்படுகிறது.
தொற்று பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்தோர் மத்தியில், சுமார் 4 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் மும்பையில் சுமார் 2 லட்சம் பேர் அடங்குவர், மேலும் பலர் தங்கள் சொந்த மாநிலங்களில் பாதுகாப்புக்காக சுற்றுப்புறங்களுக்கு நகரத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...