அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், மனைவி ரீட்டா வில்சனுக்கு கரோனா வைரஸ் உறுதி

பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று

News image
Updated On :12 மார்ச் 2020, 5:18 am

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக 63 வயதான ஹாங்க்ஸ் கூறியிருப்பதாவது: 
எங்களுக்கு சளி, சில உடல் வலிகள் இருந்தது. சற்று சோர்வாக காணபட்டோம். ரீட்டாவுக்கு சில குளிர் காய்ச்சலும் வந்து போயின. 

இதையடுத்து இருவரும் மருத்துவ ஆலோசனையைப் பெற்றோம். அதில், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பை அடுத்து "பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் வரை நாங்கள் தனிமைப்படுத்தி ஆஸ்திரேலியா அரசால் சிகிச்சை பெற்று வருகிறோம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.