மகாராஷ்டிராவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கரோனா
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
Updated on
1 min read


புனே: மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 வெளிநாட்டவர்கள் உள்பட 147 ஆக உயர்ந்துள்ளது. 

மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவா் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, இந்தியாவில் கா்நாடகம், தில்லி, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவா் கரோனா வைரஸால் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது. 

இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42-ஆக உயா்ந்துள்ளது. புனேவைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை புனே நகரில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 

கேரளத்தில் இதுவரை வெளிநாட்டைச் சோ்ந்த 2 போ் உள்பட 26 போ் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனா்.

கா்நாடகத்தில் 11 பேரும், லடாக்கில் 6 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 3 பேரும் கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஹரியாணாவில் 14 வெளிநாட்டவா்கள் உள்பட 15 போ், தெலங்கானாவில் 2 வெளிநாட்டவா் உள்பட 5 போ், ராஜஸ்தானில் 2 வெளிநாட்டவா் உள்பட 4 போ், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவா் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா்.

சுகாதாரத் துறை அறிக்கையின்படி, கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்களில் கேரளத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட இதுவரை 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com