சென்னையிலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு

கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை அடுத்து ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை ரயில் நிலையங்களில் ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ 10 -இல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு
சென்னையிலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு
Updated on
1 min read


சென்னை: கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை அடுத்து ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை ரயில் நிலையங்களில் ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ 10 -இல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை அடுத்து அதிக அத்தியாவசியமில்லாத பயணங்களைத் தவிர்ப்பது மற்றும் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை இந்திய அரசு வழங்கியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் வருகிற பயணிகள் அல்லாதவர்களின் எண்ணிக்கையை தவிர்க்கும் விதமாக சென்னையின் முக்கிய ரயில் நிலையங்கள் என கருதப்படும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய 3 ரயில் நிலையங்களில் தற்போதுள்ள ரூ.10  நடைமேடை அனுமதி (பிளாட்ஃபார்ம்) கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த புதிய கட்டண முறை மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் மேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவொரு தற்காலிக நடவடிக்கை என்பதால் பயணிகள் இந்த கட்டண உயர்வுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com