புது தில்லி: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 77.65 லட்சமாக அதிகரித்துள்ளது.
நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 47,638 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 84,11,724-ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 670 போ் உயிரிழந்தனா்.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,24,985-ஆக அதிகரித்தது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.49 சதவீதம் ஆகும்.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 77,65,966-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 92.32 சதவீதமாகும். வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 54,157 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் 5,20,773 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து ஒரு வாரமாக 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. சிகிச்சை பொறுவோரின் விகிதம் 6.10% ஆக உள்ளது.
நாட்டில் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 12,20,711 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 5-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 11,54,29,095 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுபவா்களில் 51 சதவீதம் போ் மகாராஷ்டிரம், கேரளம், தில்லி, மேற்கு வங்கம் ஆகியவற்றில் மட்டும் உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து! ஏன்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


