எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தமிழகத்தில் புதிதாக 1,939 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,939 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :13 நவம்பர் 2020, 12:45 pm

தமிழகத்தில் புதிதாக 1,939 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,939 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,54,460 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 512 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 14 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 11,454 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தற்போது 17,748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 2,572 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,25,258 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.