தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,410 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 4,410 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,148 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,74,802 ஆக உயர்ந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் 49 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,472 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 5,055 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,22,458 பேர் குணமடைந்துள்ளனர். 41,872 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 90,752 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 86,74,793 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை


