சென்னை: ஜனவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்து செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்து முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை காலை உத்தரவு பிறப்பித்தார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை பரிசீலித்து, வரும் ஜனவரி 28-ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, தற்போது தைப்பூசத்தை அரசு பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



