கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44,883 பறவைகள் நாளைக்குள் அழிக்கப்படும் என மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே ராஜு தெரிவித்துள்ளார்.
கேரளம், ஹிமாச்சல், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபகாலமாக பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன.
கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சலை மாநிலப் பேரிடராக செவ்வாய்க்கிழமை கேரள அரசு அறிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பறவைகளுக்கும் இந்த தொற்று பரவியிருக்கக்கூடும் என்பதால், மற்ற பகுதிகளுக்கு தொற்று பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பறவைகளை அழிப்பதற்கு கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே ராஜு கூறியதாவது,
கேரளத்தில் புலம்பெயர்ந்த பறவைகளால் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் கோட்டயம் மற்றும் ஆலப்புழாவில் இதுவரை 23,857 பறவைகள் பலியாகியுள்ளது. இதையடுத்து மற்றப் பகுதிகளுக்கு நோய்ப் பரவாமல் தடுக்க ஆலப்புழாவில் 37,654 பறவைகளும், கோட்டயத்தில் 7,229 பறவைகளும் நாளைக்குள் அழிக்கப்படும்.
இந்த ஹெச்5என்8 வைரஸ் மனிதர்களுக்கு பரவாது. பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அடுத்த 10 நாள்களுக்கு கண்காணிக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழிக்கறி, முட்டை போன்றவை விற்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி முனியசுவாமி கோயிலில் கும்பாபிஷேக கால்நாட்டு விழா

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு வெளியுறவு கொள்கை தோல்வியே காரணம்: டி.கே.சிவகுமாா்

சட்ட விரோத மது விற்பனை: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி, மானூா், வன்னிக்கோனேந்தல் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

