பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

அறிவியல் நகர துணைத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்

அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்த சகாயம் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

அறிவியல் நகர துணைத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்

Updated On :6 ஜனவரி 2021, 7:29 pm IST

அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்த சகாயம் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்த சகாயம் ஓய்வு பெற இன்னமும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், தனது 57வது வயதில் விருப்ப ஓய்வு கேட்டு அக்டோபர் 2ஆம் தேதி தமிழக அரசிடம் அவா் கடிதம் அளித்திருந்தாா். 

இதையடுத்து, அவரின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அவரை பணியிலிருந்து விடுவித்து புதன்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் முதன்மை செயலாளராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் பொறுப்பாக அறிவியல் நகர துணைத் தலைவராக பதவியை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.