தமிழகத்தில் கரோனா புதிய உச்சம்: ஒரே நாளில் 7,819 பேர் பாதிப்பு
தமிழக கரோனா பாதிப்பில் இன்று(புதன்கிழமை) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 7,819 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகம் கரோனா பாதிப்பில் இன்று(புதன்கிழமை) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 7,819 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,54,948ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 2,564 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 25 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,970ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3,464 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,87,663 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 54,315 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 24 மணிநேரத்தில் 96,513 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஒரே நாள் பாதிப்பாக 6,993 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டதே அதிக பாதிப்பாக இருந்தது.
கடந்தாண்டு இதே நாளில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...