நாட்டில் 11.44 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

நாட்டில் இதுவரை 11.44 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் இதுவரை 11.44 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 11 முதல் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 24 மணிநேரத்தில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 11,44,93,238 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மொத்த அளவில் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உ.பி., குஜராத், மேற்கு வங்கம், ம.பி., கர்நாடகம் மற்றும் கேரள ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 60 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com