பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தில்லியிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனா பரவல் அதிகரித்ததால், வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வார இறுதி நாள்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த உத்தரவு இன்று இரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


