ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு

புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கத்தை அறிவித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News image
புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம்: துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு
Updated On :20 ஏப்ரல் 2021, 4:24 pm

DIN

புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கத்தை அறிவித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை முழு பொதுமுடக்கத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 2 மணிவரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதியம் 2 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் 2 மணிக்கு மேல் பார்சல் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து வழிபாட்டு தலங்களில் ஊர்வலங்கள், தேரோட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.