பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மக்களவையில் தொடர் அமளி: நாளை வரை அவை ஒத்திவைப்பு

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நாளை வரை அவையை ஒத்திவைத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

News image
மக்களவையில் தொடர் அமளி: நாளை வரை அவை ஒத்திவைப்பு
Updated On :3 பிப்ரவரி 2021, 4:03 pm

ANI

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நாளை வரை அவையை ஒத்திவைத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை இன்று (பிப்.3)  பிற்பகல் கூடியது.

மக்களவை கூடிய சிறிது நேரத்தில், விவசாயிகளுக்கு பயனளிக்காத மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மக்களவையை நாளை வரை ஒத்திவைத்து பேரவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவையும் சுமூகமாக நடைபெறாமல் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.